1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 20 அக்டோபர் 2018 (12:59 IST)

மற்ற காலகட்டங்களில் பெண்களை சபரிமலையில் அனுமதிக்கலாம் : நடிகர் சிவக்குமார் ட்விட்...

மற்ற காலகட்டங்களில் பெண்களை சபரிமலையில் அனுமதிக்கலாம் : நடிகர் சிவக்குமார் ட்விட்...
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டதை கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.  கோவிலுக்குள் செல்ல முயன்ற இரண்டு பெண்கள் அதிரடியாக திரும்ப அனுப்பப்பட்டனர், இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டு வருகிறது. இதனால் தேவசம் போர்டு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இது குறித்து சினிமாவில் அனைவராலும் மதிக்கப்படும் திரையுலக மார்கண்டேயன் என அழைக்கப்படும் நடிகர் சிவக்குமார்  கூறியிருந்ததாவது:
 
பல எதிர்ப்புகளை மீறி பெண்கள் சபரிமலைக்குள் செல்வது தனக்கு பிடிக்கவில்லை என்றும், இதனால் ஏற்படும் பின்விளைவுகளை பெண்கள் தான் சந்திக்க வேண்டும் என்றார். மேலும் ஐயப்பனை வீட்டிலேயே தரிசனம் செய்யலாம் என்றும், பெண்கள் ஏன் இப்படி பைத்தியம் பிடிச்ச மாதிரி கோவிலுக்குள் செல்ல வேண்டும் என அடம்பிடிக்கிறார்கள் என தெரியவில்லை எனவும் அவர் பேசியிருந்தார்.
 
நேற்று இப்படி அவர் கூறியிருந்த நிலையில் இன்று தனது டிவிட்டர்  பக்கத்தில் அவர் மகர விளாக்கு காலத்தில் கூட்டம் அதிகம் இருப்பதால் பெண்களை அனுமதிக்க  வேண்டியதில்லை மற்ற காலகட்டத்தில் பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்கலாம். இவ்வாறு  தன் டிவிட்டர்  பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.