1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Will US president Trump dismiss?

டொனால்ட் ட்ரம்ப் பதவி நீக்கமா? அமெரிக்க நாடாளுமன்றத்தில் பரபரப்பு!

அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் அதன் பின்னர் அவருடைய செயல்கள் அவரது சொந்த கட்சிக்காரர்களுக்கே அதிருப்தியை ஏற்படுத்தியது 
 
டுவிட்டரில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவு செய்தது மற்றும் தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ளாமல் நீதிமன்றம் சென்றது ஆகியவை காரணமாக மீது நாளுக்கு நாள் டிரம்ப் மீதான அதிருப்திகள் அதிகரித்துக்கொண்டே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றம் சற்றுமுன் கூடியது. இது குறித்து தற்போது விவாதம் நடைபெற்று வருவதாகவும் விவாதத்திற்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த வாக்கெடுப்பில் டிரம்பை பதவி நீக்கம் செய்ய பெரும்பாலான எம்பிக்கள் வாக்களித்தால் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி நீக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
About Writer
siva