திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 ஜனவரி 2021 (08:51 IST)

க்யூபாவை பயங்கரவாத நாடாக அறிவித்த அமெரிக்கா! – கிளம்பும் முன் ட்ரம்ப் பார்த்த வேலை!

இன்னும் சில வாரங்களில் பதவிக்காலம் முடிந்து கிளம்ப உள்ள அதிபர் ட்ரம்ப் க்யூபாவை பயங்கரவாத நாடாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த க்யூபாவை கடந்த 1959ம் ஆண்டில் பிடல் காஸ்ட்ரோ புரட்சி மூலம் அமெரிக்காவின் பிடியிலிருந்து மீட்டு ஆட்சியமைத்தார். அதுநாள் முதல் அமெரிக்கா – க்யூபா இடையே பகை வளர்ந்து வந்தது. கடந்த 1960ம் ஆண்டில் க்யூபாவை பயங்கரவாத நாடாக அறிவித்த அமெரிக்கா அதன் மீது பொருளாதார தடைகளையும் விதித்தது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா – க்யூபா இடையேயான இந்த சலசலப்பு நீடித்து வந்த நிலையில் ஒபாமா அதிகாரத்திற்கு வந்தபோது க்யூபா மீதான தடைகளை நீக்கி நட்புக்கரம் நீட்டினார். அதுமுதல் சுமூகமான உறவு தொடர்ந்து வரும் நிலையில் தற்போது சில காலத்தில் பதவி விலக உள்ள அதிபர் ட்ரம்ப் க்யூபாவை மீண்டும் பயங்கரவாத நாடாக அறிவித்துள்ளார். இதற்கு க்யூபா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.