Sugapriya Prakash|
Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (13:22 IST)
டிரம்ப் ஒரு தோல்வியடைந்த தலைவர் என பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், நடப்பு அதிபர் ட்ரம்பை விட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும் அவரது வெற்றியை ஏற்றுக் கொள்ளாமல் அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தார்.
ஒரு கட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்து, சான்று வழங்கப்பட்ட பின்னர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகரும், குடியரசு கட்சியைச் சேர்ந்த கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்டு, டிரம்பை விமர்சித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, டிரம்ப் ஒரு தோல்வியடைந்த தலைவர். ஜனாதிபதி தேர்தலில் வெளியான நியாயமான முடிவுகளை அவர் தடுக்க நினைத்தார். பொய்களால் அமெரிக்க மக்களை தவறாக வழி நடத்த முயன்றார்.
அமெரிக்க அரசியலமைப்பை மாற்ற நினைத்தவர்கள் தற்போது ஒன்றை அறிந்திருப்பார்கள். ஒருபோதும் அவர்களால் வெற்றிபெற முடியாது என்பதுதான் அது என தெரிவித்துள்ளார்.