1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 13 ஜனவரி 2021 (20:21 IST)

வாஜ்பாயை சந்திக்க டெல்லி செல்கிறாரா எடப்பாடி? அமைச்சரின் அதிர்ச்சி பேச்சு!

வாஜ்பாயை சந்திக்க டெல்லி செல்கிறாரா எடப்பாடி? அமைச்சரின் அதிர்ச்சி பேச்சு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விரைவில் டெல்லி செல்ல உள்ள நிலையில் பிரதமர் வாஜ்பாயை சந்திக்கத்தான் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்கிறார் என அமைச்சர் ஒருவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் வாஜ்பாயை அழைக்க எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளார் என சிவகங்கையில் நடந்த கூட்டமொன்றில் அமைச்சர் பாஸ்கரன் அவர்கள் பேசினார். இந்த பேச்சால் கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
 
வாஜ்பாய் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது என்பதும் வாஜ்பாய் பிரதமர் ஆனபின்னர் மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தார் என்பதும் அதன் பின்னர் தற்போது பிரதமராக நரேந்திர மோடி ஆறு ஆண்டுகள் இருந்து வருகிறார் என்பதும் கிட்டத்தட்ட வாஜ்பாய் பிரதமராகி 20 ஆண்டுகள் ஆகி விட்டது என்பதும் தெரிந்ததே 
 
மேலும் வாஜ்பாய் அவர்கள் கடந்த 2018ஆம் ஆண்டு காலமானார் என்பதும் அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் பிரதமர் வாஜ்பாயை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்ல உள்ளார் என அமைச்சர் பாஸ்கரன் உள்ளது பேரதிர்ச்சியை அனைவருக்கும் ஏற்படுத்தி உள்ளது