திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 12 ஜனவரி 2021 (18:03 IST)

டிரம்பை அடுத்து அவரது ஆதரவாளர்களின் 70 ஆயிரம் கணக்குகளை முடக்கிய ட்விட்டர்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்த பின் உண்மைக்கு மாறான பல கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருவதாகவும் அவரது கருத்துக்களில் சில வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாகவும் அவரது கணக்கை நிரந்தரமாக டுவிட்டர் நிர்வாகம் நீக்கியது 
 
இதனால் டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகள் சரிந்தும் சுமார் 40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் டிரம்ப் டுவிட்டர் நீக்கியதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் டுவிட்டர் கணக்கையும் டுவிட்டர் நிர்வாகம் இடைநிறுத்தம் செய்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஒருவரே பல கணக்குகள் வைத்திருந்ததாகவும், மாறி மாறி சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்து வருவதாகவும் அதனால் அவர்களுடைய டுவிட்டர் கணக்குகளை நீக்கி இருப்பதாகவும் மொத்தத்தில் டுவிட்டரை சுத்தம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் டுவிட்டர் நிர்வாகம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது