வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 17 ஜூலை 2021 (20:13 IST)

வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம் !

உலகில் உள்ள சமூக வலைதலங்களில் அதிகளவு மக்களால் பயன்படுத்தப்படுவது வாட்ஸ் ஆப். இது செல்போன் பயனாளர்களில் அத்தியாவசியமான ஒரு செயலியாகிவிட்டது.

இதன் பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதில் அதிகளவில் உண்மைக்குப் புறம்பான பொய் தகவல், வதந்திகள், அவதூறுகள் பரப்பப்படுவதாக  புகார் எழுந்தது.

இந்நிலையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் ஒரே மாதத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான  அக்கவுண்ட்களை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை உலளவில் ஒப்பிடும்போது, இந்தியாவில் 25% எண்ணிக்கை எனவும் தவறு நடக்கக் காரணமாக உள்ள குறுந்தகவல்கள் பகிரப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே எங்களின் நோக்கம் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.