திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (19:38 IST)

காஷ்மீர் விவகாரத்தை கூர்ந்து கவனித்து வருகிறோம் - அமெரிக்கா

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்பட்டு, மறுசீராய்வு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தை மிக கவனமாக பார்த்து வருவதாக அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அண்மையில் அமெரிக்கா சென்றார். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு மத்தியஸ்தம் காணவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 
ஆனால் இதற்கு இந்தியா சுத்தமாக மறுத்துவிட்டது. இதனைத்தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்து பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. 
 
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் , இது சட்டவிரோதமான நடவடிகை என்றும் இதற்கு சட்டப்படி பதிலடி தரப்படும் எனவும் தெரிவித்தது.
 
இந்நிலையில் ஜமு காஷ்மீர்  விவகாரம் குறித்து, அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருவதாக கூறிய அமெரிக்க செய்தி தொடர்பாளர்  மார்கன் ஆர்டகஸ் ,இந்த சுழலில்  அமைதிகாக்க வேண்டும் என பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார்.