திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (18:35 IST)

நாயை குளிப்பாட்டும் இரு மனிதக் குரங்குகள் ...பரவலாகும் வீடியோ

அமெரிக்காவில்  சிம்பன்சி வகை மனிதக் குரங்குகள், ஒரு நாயைக் குளியல் தொட்டியில் போட்டு குளிப்பாட்டிவிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 
அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ள மிர்டில் பீச் சஃபாரி என்ற பகுதியில் வசிக்கும் ஒரு நபர், தான் வளர்த்து வரும் நாயை, குளியல் தொட்டியில் போட்டு குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்.
 
அப்போது, இரு சிம்பன்சி வகை மனிதக் குரங்குகள் நடந்து வந்து, அவருக்கு உதவி செய்யும் வகையில் நாய்க்கு ஷேம்பு போட்டு தேய்ந்து குளிக்க வைத்தன. பின்னர் நாயை குளிப்பாட்டி விட்டு அதைத் துடைத்துவிட்டன.
 
அதனைத்தொடர்ந்து அந்த நபர், சிம்பன்சி வகை மனித குரங்குகளுக்கு சோப்பு போட்டு தேய்ட்து குளிப்பாட்டி விட்டார். இதனையடுத்து பதிலுக்கு அந்த குரங்குகள் அவருக்கு தேய்த்து குளிப்பாட்டி விட்டன.  
 
இந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகின்றது குறிப்பிடத்தக்கது.