செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 ஜனவரி 2024 (11:24 IST)

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய விவேக் ராமசாமி! – டொனால்ட் ட்ரம்ப்க்கு ஆதரவு அளிப்பதாக அறிவிப்பு!

Vivek Ramasamy
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி அதிலிருந்து விலகியுள்ளார்.



அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடியரசு தலைவர் தேர்தல் நடத்தப்பட்டு அந்நாட்டிற்கான அதிபர் தேர்வு செய்யப்படுகிறார். அவ்வாறாக கடந்த 2020ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிபராக பதவி ஏற்றார். அதற்கு முன்பு தொடர்ந்து இருமுறை டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பங்கேற்று மீண்டும் குடியரசு தலைவராக வேண்டும் என்பதில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக அவர் சார்ந்த குடியரசு கட்சியிலும் தொடர்ந்து தனக்கான ஆதரவை அதிகரித்து வருகிறார்.


குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலுக்கு போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி மற்றும் நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவி வந்தது. இதில் யார் அதிபராக போட்டியிட வேண்டும் என்பதை குடியரசு கட்சி உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்வது வழக்கம்.

அவ்வாறாக நேற்று அயோவா மாகாணத்தில் நடந்த கட்சி வாக்குப்பதிவில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அதையடுத்து அதிபர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த விவேக் ராமசாமி தனது முழு ஆதரவை டொனால்ட் ட்ரம்புக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K