1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2023 (20:14 IST)

விஜயகாந்த்-ன் இழப்பு தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும்-இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர்

vijayakanth death
தமிழ் சினிமாவின் பிரபல  நடிகரும், தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
 

அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

''தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். மக்களுக்காக தன்னை முழுமையான அர்ப்பணித்த மனிதர் விஜயகாந்த்.

எவருக்கும் அஞ்சாது, மக்களுக்காக உடனுக்குடன் சேவையைச் செய்யும் அரசியல் தலைவர். இலங்கை மக்கள் மீது அதீத அன்பு கொண்டவர், இலங்கையில் இருந்து அகதிகளாக வரும் மக்களுக்கு பல உதவிகள் செய்துள்ளார்.

பாமக மக்களுக்கு விருந்தோம்பல் செய்வதில் ஈடு இணையற்றவர். இவருடைய இழப்பு தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.