வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2023 (13:47 IST)

தமிழ்நாடு மீனவர்கள் 21 பேர் கைது.. மீண்டும் அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படை..!

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த பல ஆண்டுகளாக எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருவது தொடர் கதை ஆகி உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய மாநில அரசுக்கு தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்களை இன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 21 மீனவர்களில் 13 பேர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் என்றும் 8 பேர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
கைது செய்யப்பட்ட அனைவரிடமும் யாழ்ப்பாணம் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran