வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 22 ஆகஸ்ட் 2018 (20:59 IST)

ஒரு கிலோ தக்காளியின் விலை 50 லட்சம்

வெனிசுவேலாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக அந்நாட்டின் பணமான பொலிவரின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆண்டு பணவீக்கம் 10 லட்சம் சதவீதத்தை தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
 
பணமதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் அந்நாட்டிற்கான புதிய பணத்தை (கரன்சி) வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை என்னவாக இருக்கிறது என்பதை பாருங்கள்..
 
1. ஒரு கிலோ தக்காளியின் விலை 50 லட்சம் பொலிவர்கள்
2. வெனிசுவேலாவின் தலைநகர் கராகஸில் 2.4 கிலோ கோழிக்கறி விலை 1.46 கோடி பொலிவர். 
3. ஒரு கழிப்பறை தாள் உருளை 26 லட்சம் பொலிவர்கள். 
4. கேரட்டுகளின் விலை 30 லட்சம் பொலிவர்கள்.
5. ஒரு கிலோ அரிசியின் விலை 25 லட்சம் பொலிவர்கள்.
6. ஒரு பாக்கெட் சானிட்டரி நாப்கின் 35 லட்சம் பொலிவர்கள்.
7. ஒரு கிலோ மாட்டுக்கறியின் விலை 95 லட்சம் பொலிவர்கள்.