1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (15:24 IST)

மன உறுதி சோதனைக்கு ஆபாச நடிகையின் நடனம்: ராணுவத்தில் சர்ச்சை

தென் கொரியாவில் ராணுவ வீரர்களின் மன உறுதியை சோதனை செய்யவும், மன உறுதியை அதிகரிக்கவும் இளம்பெண் ஒருவரின் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 
தென் கொரியாவில் ராணுவ வீரர்களின் மன உறுதியை அதிகரிப்பதற்காக தனியார் நிறுவனம் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின் இடையே 12 வயது இளம்பெண் ஒருவர் ஆபாச நடமாடினார். 
 
இதை கண்ட ராணுவ வீரர்கள பலர் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியும் உள்ளனர். இந்த வீடியோ காட்சிகளை அந்த தனியார் நிறுவனம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியது. இந்த வீடியோவை பலர் பார்வையிட்டுள்ளனர். 
 
இருப்பினும், மன உறுதியை சோதனை செய்ய இவ்வாறு செயல்படுவதா? என பல இந்த நிகழ்வுக்கு எதிர்ப்புக்களும் கிளம்பியுள்ளது.