வேகமாக கவிழ்ந்த ”வேகா” ராக்கெட்: ஃபிரான்ஸின் முதல் தோல்வி

Last Updated: வெள்ளி, 12 ஜூலை 2019 (11:54 IST)
செயற்கை கோளுடன் விண்ணில் செலுத்தப்பட்ட வேகா ராக்கெட், கடலில் விழுந்து நொறுங்கியது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் செயற்கைக்கோளுடன்,கடந்த புதன்கிழமை, ஃபிரான்ஸின் வேகா ராக்கெட், ஃப்ரெஞ்சு கயானா பகுதியிலுள்ள ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. மிகத் துல்லியமாக படம்பிடிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைகோளின் பெயர் ”ஃபால்கன்ஐ-1”.

வர்த்தக ரீதியாக செயற்க்கைக்கோள்களை முதன்முறையாக விண்ணில் செலுத்திய ஏரியன்ஸ்பேஸ் நிறுவனத்தின் ராக்கெட்டான ’வேகா’, கடந்த 2012 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை ஒருமுறை கூட தோல்வியடையாத இந்த ராக்கெட், தற்போது முதல் முதலாக தோல்வியடைந்து கடலில் கவிழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :