வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 4 மார்ச் 2020 (16:01 IST)

6 கி.மீ.க்கு சாம்பலை கக்கிய எரிமலை..

இந்தோனேஷியாவில் எரிமலை ஒன்று வெடித்ததில், சுமார் 6 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் புகை வெளியேறியது.

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில், மெராபி என்னும் எரிமலை வெடித்தது. அதிலிருந்து சுமார் 6 கி.மீ. உயரத்திற்கு புகை எழுந்தது. இந்நிலையில் முன்னதாகவே வெடிப்பு ஏற்படும் என்பதால் எரிமலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

அப்பாதையில் விமானங்கள் கடக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 3 கி.மீ. தூரம் உள்ள கிராமங்கள் வரை, சாம்பல் புகை மழை போல் பெய்தது.