செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 2 மார்ச் 2020 (13:09 IST)

மூவாயிரத்தை தாண்டியது கொரோனா பலி எண்ணிக்கை..

கொரோனா வைரஸால் உலக நாடுகளில் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் மட்டுமே கொரோனாவல் 2,912 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் சீனாவில் குறைந்து வருவதாக தெரியவருகிறது. சீனாவில் நேற்று 42 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இது முந்திய அனுதினமும் உயிரிழப்பவர்களின் விகிதத்தை விட குறைவானதாகும்.

சீனாவில் உயிரிழப்பு விகிதங்கள் குறைந்தாலும் இத்தாலி, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. உலகளவில் கொரோனா வைரஸால் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.