செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (08:21 IST)

தடுப்பூசிகளின் செயல்திறன் 3 மாதங்களில் குறைகிறது! – ஆய்வில் தகவல்!

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மக்களிடையே தடுப்பூசியின் எதிர்ப்புதிறன் குறைந்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் மற்றுமொரு திரிபான ஒமிக்ரான் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. பல நாடுகளில் இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒமிக்ரான் பரவலை ஏற்கனவே செலுத்திய தடுப்பூசிகள் தடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து லண்டனின் மருத்துவ இதழான லாண்செட் ஸ்காட்லாந்தில் 20 லட்சம் பேர், பிரேசிலில் 4 கோடி பேரின் தரவுகளை ஆய்வு செய்துள்ளது. அதில் ஆஸ்போர்டு மற்றும் ஆஸ்ட்ராஜெனிகா இணைந்து உருவாக்கிய தடுப்பூசியின் திறன் தடுப்பூசி செலுத்திய 2 வாரங்களுடன் ஒப்பிடும்போது 5 மாதங்களுக்குள் வெகுவாக குறைந்துள்ளதாகவும், மீண்டும் கொரோனா பாதிப்பு மற்றும் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.