புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2019 (20:47 IST)

கனடா பாராளுமன்றம் கலைப்பு: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி

கனடா நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
 
கனடா நாட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து கடந்த நான்கு ஆண்டுகளாக ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக பதவியில் இருந்தார். இவருடைய ஆட்சி சிறப்பாக இருந்ததாக மக்கள் விமர்சனம் செய்தனர். குறிப்பாக கனடாவில் உள்ள தமிழர்களுக்கு இவர் பெரிதும் உதவி செய்தார்
 
 
இந்த நிலையில் சற்றுமுன் கவர்னர் ஜெனரல் ஜூலி பெயிட்டி என்பவரை சந்தித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா பாராளுமன்றத்தை கலைக்க பரிந்துரை செய்தார். இதனையடுத்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 
 
 
இந்த நிலையில் கனடாவில் பாராளுமன்ற தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் மக்களுக்கு அதிக அளவில் நல்லது செய்துள்ளோம். எனவே மக்கள் மீண்டும் எங்களை தேர்வு செய்வார்கள் என்ற இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
 
 
கனடாவில் லிபரல் கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சி, நியூ டெமாக்கரேட்டிவ் கட்சி என மூன்று முக்கிய கட்சிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் மீண்டும் லிபரல் கட்சி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன,