திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (16:00 IST)

எல்லை தாண்ட முயன்று பனியில் உறைந்த இந்தியர்கள்! – அமெரிக்காவில் சோகம்!

அமெரிக்கா – கனடா எல்லைப்பகுதியில் இந்திய குடும்பம் ஒன்று பனியில் உறைந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா – கனடா எல்லைப்பகுதியில் கடந்த சில நாட்கள் முன்னதாக இந்தியாவை சேர்ந்த ஒரு ஆண், பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் பனியில் உறைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்த அந்த நபர்கள் யார் என்பதை கண்டறிய இந்திய, அமெரிக்க தூதரகங்கள் தீவிர விசாரணையில் இறங்கின.

இந்நிலையில் இறந்த அந்த குடும்பத்தினர் குஜராத்தை சேர்ந்த ஜெகதீஷ் பால்தேவ்பாய் பாட்டீல் என தெரிய வந்துள்ளது. கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த ஜெகதீஷ் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றபோது பனியில் உறைந்து அவரது குடும்பமே இறந்துள்ளது. அவர்களை அமெரிக்காவில் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஸ்டீவ் சாண்ட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.