வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 19 ஜூலை 2018 (17:36 IST)

32 கி.மீ நடந்து வந்த இளைஞருக்கு தனது காரை பரிசளித்த முதலாளி

அமெரிக்காவில் தனது முதல் நாள் பணிக்கு 32 கிமீ நடந்து சென்ற இளைஞருக்கு நிறுவனத்தின் முதலாளி கார் ஒன்றை பரிசளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

 
அமெரிக்காவின் பெல்ஹாம் நகரைச் சேர்ந்த வால்டர் கார்(22) என்ற இளைஞருக்கு பகுதிநேர வேலை ஒன்று கிடைத்துள்ளது. இவர் பணிக்கு தனது வீட்டில் இருந்து 32 கி.மீ செல்ல வேண்டும். சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட காத்தரீனா புயலின் போது இவர் வீடு சேதமடைந்து தற்போது தனது தாயுடன் வறுமையான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார்.
 
இவரிடம் கையில் பணமும் இல்லை. எனவே தனது முதல் நாள் பணிக்கு நேரத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து இரவு நேரமே நடக்க தொடங்கியுள்ளார். இவர் செல்லும் வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸார் இவரை அழைத்து விசாரித்துள்ளனர்.
 
அவர்களிடம் இளைஞர் தனது கதையை கூறியுள்ளார். இவரின் கதையை கேட்ட போலீஸார் சாப்பாடு வாங்கி கொடுத்து தேவாலயம் ஒன்றில் தங்க வைத்து பின்னர் அவர்களது தோழி வீட்டு அழைத்து சென்றுள்ளனர்.
 
அங்கு நடந்தவற்றை போலீஸார் கூற அவர்களது தோழி இதை அந்த இளைஞர் பணிக்கு செல்லும் நிறுவனத்தின் முதலாளிக்கு ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 
இதையடுத்து இளைஞர்கள் பணிக்கு சென்ற நிறுவனத்தின் முதலாளி அந்த இளைஞருக்கு தான் பயன்படுத்திய காரை பரிசலித்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்.