வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 16 ஜூலை 2018 (10:58 IST)

லிப்ட் கொடுத்தது தப்பா? வாலிபரை மிரட்டி கொள்ளையடித்த இளைஞர் கைது

சென்னையில் பரிதாபப்பட்டு லிப்ட் கொடுத்த வாலிபரை மிரட்டி செல்போன், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த கொள்ளையனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை நெசப்பாக்கம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த மோசஸ்(19), என்பவர் அசோக்நகரில் பணியாற்றி வருகிறார். பணிமுடிந்து நள்ளிரவு 12.30  தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மோசஸிடம் ஒரு இளைஞர் லிப்ட் கேட்டார். மோசஸும் பரிதாபப்பட்டு அவருக்கு லிப்ட் கொடுத்தார். 
 
சிறிது தூரம் சென்றதும் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர், கத்திமுனையில் மோசஸின் செல்போன் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். மோசஸ் அவரை மடக்கிப் பிடித்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அட்டி கொடுத்து  எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கோயம்பேட்டைச் சேர்ந்த சாந்தகுமார் என்பது தெரியவந்தது. போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
இவர்களைப் போல் ஒரு சிலரால், அவசரத்திற்கு லிப்ட் கேட்கும் மக்களையும் சந்தேகக் பார்வையிலே பார்க்க வேண்டியதாய் உள்ளது.