ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 7 ஜூலை 2018 (09:20 IST)

பசுமை வழி சாலை எதிர்ப்பு - போலீஸ் டி.ஜி.பியை மிரட்டிய வாலிபர் கைது

சென்னை-சேலம் பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போனில் போலீஸ் டி.ஜி.பியை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை - சேலம் இடையே மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் அமைய உள்ள இந்த திட்டத்தால் ஏராளமான விளை நிலங்கள் பாதிக்கப்படும் என தெரிகிறது. 
 
இத்திட்டத்திற்காக தொடர்ந்து விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் மன்றாடியும் அரசு காவல் துறையை ஏவி விவசாயிகளின் நிலத்தை அபகரித்து வருகிறது. சேலத்தை சுற்றியுள்ள இடங்களில் நிலம் அளக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் நேற்று டிஜிபிக்கு போன் செய்த மர்ம நபர், மக்களிடம் தொடர்ந்து நிலத்தை அபகரித்து வந்தால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். 
 
அந்த செல்போன் எண்ணைக் கொண்டு போலீஸார் விசாரித்ததில், சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த விஜய்பாபு என்பவர் தான் காவலரை மிரட்டியுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.