சுற்றுலாவுக்கு அதிகம் செலவழித்தீர்களா? அப்போ ஆப்பிளுக்கு அபராதம் செலுத்துங்கள் - சுங்கத்துறை அதிகாரிகள்
பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்று திரும்பிய அமெரிக்க பெண் ஆப்பிள் எடுத்து வந்ததால் அவருக்கு சுங்கத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
அமெரிக்காவில் டென்வர் பகுதியை சேர்ந்த பெண் கிரிஸ்டல் டெட்லாக் என்பவர் பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயண்ம் சென்று திரும்பியுள்ளார். அவர் நாட்டிற்கு திரும்பிய டெல்டா ஏர் லைன்ஸ் விமானத்தின் அவருக்கு ஆப்பிள் தந்துள்ளனர். அதை அவர் தனை கைபையில் வைத்து எடுத்து வந்துள்ளார்.
டென்வர் விமான நிலயத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் ஆப்பிள் சிக்கியது. விமான விதிகள் படி தின்பண்டங்கள் உட்பட எந்த பொருளையும் சொல்லாமல் எடுத்து வருவது குற்றமாகும். அதன் அடிப்படையில் அதிகாரிகள் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.
ஆனால் அந்த பெண் ஆப்பிள் எனக்கு விமானத்தில் இலவசமாக வழங்கப்பட்டது என்று வாதாடியுள்ளார். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் அவரின் வாதத்தை கேட்கவில்லை. அதிகாரிகள் அந்த பெண்ணிடம் சுற்றுலாவுக்கு அதிகம் செலவழித்தீர்களா? என்ற கேட்க அவரும் ஆம் என்று கூறியுள்ளார். செலவோடு செலவாக அபராதமும் செலுத்துங்கள் என்று கூறி அபராதம் விதித்துள்ளனர்.