செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 26 மே 2021 (14:21 IST)

எல்.கே.ஜி டு பள்ளியிறுதி படிப்பு: ஒருநாள் கூட லீவ் போடாத மாணவர்!

எல்.கே.ஜி டு பள்ளியிறுதி படிப்பு: ஒருநாள் கூட லீவ் போடாத மாணவர்!
எல்கேஜி முதல் டிகிரி படிப்பு முடியும் வரை ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத மாணவர் ஒருவர் குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 
 
அமெரிக்காவை சேர்ந்த பிளேக் வுல்ஃப் என்ற ஒரு மாணவன் கிண்டர்கார்டன் என்று கூறப்படும் எல்கேஜி படிப்பிலிருந்து பள்ளி காலம் முடியும் வரை ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் சென்றுள்ளார். பள்ளிக்கு இவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்தது இல்லை என்பது அமெரிக்காவிலேயே ஒரு சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
 
பள்ளிக்கு செல்லும் போது விடுமுறை எடுக்க வேண்டும் என்று பலமுறை தோன்றியதாகவும் ஆனாலும் பள்ளி படிப்பின் முக்கியத்துவம் கருதி தான் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்க வில்லை என்றும் பேட்டி ஒன்றில் பிளேக் தெரிவித்துள்ளார் 
 
இவரது சாதனையை பலர் பாராட்டி வந்தாலும் ஒரு சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். உறவினர்களின் நண்பர்களின் நல்லது கெட்டதுக்கு கூட செல்லாமல் விடுமுறை எடுக்காமல் அப்படி என்ன பெரிய சாதனை தேவையிருக்கிறது என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இருப்பினும் இவரது சாதனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது