திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 26 மே 2021 (09:35 IST)

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் அமைதி ஏன்? கமல்ஹாசனுக்கு நெட்டிசன்கள் கேள்வி!

சூரப்பா விவகாரத்தில் முதல் நபராக பொங்கி எழுந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் குறித்து அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வியை நெட்டிசன்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எழுப்பியுள்ளனர்
 
சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி உள்ள ஆசிரியர் ஒருவர் பாலியல் விவகாரத்தில் சிக்கியுள்ள நிலையில் கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் இந்த விஷயத்தை கண்டித்துள்ளனர். கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குரல் எழுப்பியுள்ளனர்.
 
ஆனால் சூரப்பா விவகாரத்தில் முதல் நபராக பொங்கி எழுந்து அறிக்கை வெளியிட்ட, வீடியோவில் கமல்ஹாசன், அனிதா விஷயத்தில் ஆவேசமான கருத்து கூறிய கமல்ஹாசன், பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் நடந்து ஒரு நாள் முழுவதும் ஆகியுள்ள நிலையில் இன்னும் வாயை திறக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இதனை அடுத்து கமலஹாசன் இனிமேலாவது இது குறித்து தனது கருத்தை தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.