செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 26 மே 2021 (12:08 IST)

தைரியமாக வெளியில் பேசுவதை பாராட்டுகிறேன்… ஓவியா டிவீட்!

நடிகை ஓவியா சமீபத்தில் சர்ச்சையாகி விவாதிக்கப்படும் மாணவிகளின் பாலியல் தொல்லை குறித்து டிவீட் செய்துள்ளார்.

சென்னையில் உள்ள பிரபல பள்ளியான பத்மா சேஷாத்திரி பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலரும் அந்த பள்ளியில் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் மற்றும் சாதி ரீதியான தொல்லைகள் குறித்து பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை ஓவியா மாணவிகள் தைரியமாக இந்த குற்றச்சாட்டை வெளியியில் சொல்லி இருப்பது குறித்து பேசியுள்ளார். அதில் ‘நான் உண்மையாகவே அந்த நேர்மையையும் தைரியத்தையும் புரிந்துகொண்டு பாராட்டுகிறேன். பேசுங்கள் மற்றும் சொல்லுங்கள் #metoo’ எனக் கூறியுள்ளார்.