செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 10 ஜனவரி 2021 (08:08 IST)

டுவிட்டர் கணக்கு நீக்கம் எதிரொலி: சொந்தமாக சமூக வலைத்தள தொடங்க டிரம்ப் திட்டம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் கணக்கில் தவறான மற்றும் வன்முறையை தூண்டும் தகவல்களை பதிவு செய்து வந்ததால் முதலில் சஸ்பென்ட் செய்த டுவிட்டர் பின்னர், நிரந்தரமாக டுவிட்டர் கணக்கை நீக்கியது. இதனால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தனது டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டதை அடுத்து சொந்தமாக சமூக இணையதளம் ஒன்றை ஆரம்பிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது விரைவில். தமக்கான ஒரு சமூகத்தை உருவாக்க போவதாகவும் அதற்கான பணியை விரைவில் தொடங்க உள்ளதாகவும் டிரம்ப் தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளது 
 
டிரம்ப் சொந்தமாக தொடங்கும் சமூக ஊடகத்திற்கு உலகம் முழுவதும் இருந்து வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அமெரிக்க அதிபர் டொனால்டு பதவியில் இருக்கும் வரை அவருக்கு ஆதரவு தெரிவித்த டுவிட்டர் இணையதளம் தற்போது அவர் பதவி விலக போவதை அடுத்து அவருக்கு எதிரான நடவடிக்கையை டிரம்ப் எடுத்து வருவது பாரபட்சமானது என டிரம்பின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
எனவே ட்விட்டர் நிர்வாகத்திற்கு பாடம் புகட்டும் வகையில் ட்ரம்ப் ஆரம்பிக்கும் சமூகவலைதளம் இருக்கும் என்று கூறப்படுகிறது