திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 8 ஜனவரி 2021 (14:25 IST)

ஒரு தலைமுறையின் தலையில் இடி விழுந்திருக்கிறது: வைரமுத்து கண்டனம்!

சமீபத்தில் அஞ்சல்துறைக்கான தேர்வில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என மத்திய அரசின் அறிவிப்புக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனை அடுத்து பிராந்திய மொழிகளிலும் கேள்வித்தாள்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதிமொழி கொடுத்தது
 
ஆனால் சமீபத்தில் நடந்த அஞ்சல் துறை தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்வித்தாள்கள் இருந்ததால் தேர்வாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு அனைத்து கட்சிகளும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் 
 
அந்த வகையில் தற்போது கவிஞர் கவியரசு வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் அஞ்சல்  துறை தேர்வுக்கு தமிழில் தயாராகிக் கொண்டிருந்த ஒரு தலைமுறையின் தலையில் இடி விழுந்து இருக்கிறது என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் பதிவு செய்த டுவிட்டில் கூறியிருப்பதாவது:
 
அஞ்சல்துறைத் தேர்வுக்குத்
தமிழில் தயாராகிக் கொண்டிருந்த
ஒரு தலைமுறையின்  தலையில்
இடி விழுந்திருக்கிறது.
 
ஆங்கிலத்திலும் இந்தியிலும்தான்
தேர்வெழுத வேண்டுமா?
இனி
ஆங்கிலத்திலும் இந்தியிலும்
முகவரி எழுதினால்தான்
அஞ்சல் சென்று சேருமா?
 
சினத்தோடு கண்டிக்கிறோம்.