ட்ரம்ப்பின் சமூக வலைதள பக்கங்கள் முடக்கம்: அடுத்து என்ன??
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் சமூக வலைதள பக்கங்கள் முடக்கம்.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், நடப்பு அதிபர் ட்ரம்பை விட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும் அவரது வெற்றியை ஏற்றுக் கொள்ளாமல் அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தார். மேலும் வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
இதனால், வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கின. இவரது சமூக வலைத்தளப்பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யும் வகையில், எதிர்காலத்தில் சொந்த தளத்தை (டுவிட்டருக்கு மாற்றாக) உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.