திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 13 டிசம்பர் 2017 (16:03 IST)

கைது செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணை தாக்கி கருவை கலைத்த போலீஸார்!!

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவரை போலீஸார் தாக்கியதால் அவரது கர்ப்பம் கலைந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
காதலனுடன் ஏற்பட்ட சண்டையால் தனது தற்காப்பிற்காக அவரை கத்தியால் குத்தியுள்ளார் Martini Smith. இதனால் வன்முறையில் ஈடுபட்டதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அப்போது அந்த பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். சிறியில் இருந்த போது விசாரணை என்ற பெயரில் போலீஸார் அவரை தாக்கியுள்ளனர். தண்ணீரை பாய்ச்சியும் கொடுரமாய் சித்தரவதை செய்துள்ளனர். இதனால் அவரது கரு கலைந்துள்ளது.
 
இது குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த பெண் மட்டுமின்றி இது போன்று பல கைதிகள் ஓகியோ சிறையில் கடுமையாக தாக்கப்படுவதாக தெரிகிறது. மேலும், அமெரிக்காவில் இது போன்று நான்கு வேறி சிறைகளிலும் கைதிகள் கொடுமைபடுத்தப்படுவதால் ஐநா இது குறித்த விசாரணையை கையில் எடுத்துள்ளது.