1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 12 டிசம்பர் 2017 (16:05 IST)

காதலனை அடித்து, இளம் பெண்ணுடன் உல்லாசம் கண்ட போலீஸ்!!

ராய்ப்பூரில் விதான் சபா பகுதியில் காதலனை அடித்து இளம் பெண்ணை போலீஸார் கற்பழித்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ராய்ப்பூரில் உள்ள விதான் சபா பகுதியில், 20 வயது இளம்பெண் தன் காதலனுடன் மறைவிடத்தில் அம்ர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இதை கண்ட போலீஸார் இருவரையும் அழைத்து சென்று மிரட்டியுள்ளனர்.
 
மேலும், அந்த பெண்ணின் காதலரை அடித்து உதைத்துள்ளனர். இருவரையும் மிரட்டி ரூ.15,000 பறித்தனர். அதோடு நிறுத்தாமல், அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று கற்பழித்துள்ளனர்.
 
ஹீராலால் நிர்மல்கர், திகாராம் தாரக் ஆகியோர்தான் அந்த காவல் அதிகாரிகள் என கூறப்பட்டுள்ளது. போலீஸ்காரர் ஹீராலால் செல்போன் மூலம் பெண்ணிடம் மேலும் ரூ.5,000 கேட்டு தொந்தரவு செய்து கொண்டிருந்தார்.
 
தொல்லை தாங்க முடியாத பெண், போலீஸ்காரரின் பேச்சை செல்போனில் பதிவு செய்து அதை ஆதாரமாக வைத்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதையடுத்து 2 போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் இருவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.