1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 மார்ச் 2025 (14:14 IST)

இந்த ஆண்டு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு எப்போது? முக்கிய தகவல்..!

Engineering
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 430-க்கும் அதிகமான இன்ஜினியரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இளநிலை படிப்புகளுக்காக 1.70 லட்சம் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்காக மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இணையதளத்தின் மூலம் நடத்தப்படுகிறது. இதை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மேற்பார்வை செய்கிறது.
 
இந்த கல்வி ஆண்டில் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இன்ஜினியரிங் கலந்தாய்வில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனடிப்படையில், 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
 
முன்கூட்டியே வகுப்புகள் தொடங்க இருப்பதால், கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் குறைக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்:
 
"இந்த ஆண்டு இன்ஜினியரிங் கலந்தாய்வு ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது. எனவே, தரவரிசை பட்டியலும் அதற்கு முன்னதாகவே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு கலந்தாய்வு ஜூலை 22 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு அனைத்து செயல்முறைகளும் ஆன்லைனில் நடைபெற உள்ளதால், கலந்தாய்வுக்கு ஒதுக்கப்பட்ட கால அளவு சுருக்கப்படலாம். இது தற்போது ஆரம்பக் கட்ட யோசனை மட்டுமே. இறுதி முடிவுக்கு மேலதிக அதிகாரிகளின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது" என தெரிவித்தார்.
 
Edited by Mahendran