இதுவொரு நம்ப முடியாத சாதனை: ‘சந்திராயன் 3’ வெற்றி குறித்து கமலா ஹாரிஸ்..!
சந்திராயன் 3 வெற்றி நம்ப முடியாத வெற்றி என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இஸ்ரோவின் விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 மிகப்பெரிய வெற்றியடைந்து, நேற்று நிலவில் தரையிறங்கியது என்பதும் இதனை அடுத்து உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதையும் பார்த்தோம்.
அந்த வகையில் ஏற்கனவே நிலவுக்கு விண்கலங்களை அனுப்பி சாதனை செய்த அமெரிக்கா தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இது குறித்து கூறிய போது இது ஒரு நம்ப முடியாத சாதனையாகும். விண்வெளி ஆய்வில் உங்களுடன் பங்குதாரர்களாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பாராட்டு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran