வெள்ளி, 21 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 மார்ச் 2025 (11:48 IST)

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

Karaikudi Rowdy murder

சமீபத்தில் ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் ரவுடி ஒருவர் ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காரைக்குடியில் அப்படியான ஒரு சம்பவம் நடந்துள்ளது.

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சேர்வாவூரணி பகுதியை சேர்ந்தவர் மனோ. பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் இவர் மீது காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை தொடர்பாக ஏராளமான வழக்குகள் உள்ளன. சமீபத்தில் வழக்கு ஒன்றில் கைதாகி இருந்த மனோ ஜாமீனில் வெளியே வந்தார்.

 

தினமும் காரைக்குடி வடக்கு காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை கையெழுத்து போடுவதற்காக நண்பர்களுடன் பைக்கில் மனோ புறப்பட்டுள்ளார். காரைக்குடி 100 அடி சாலையில் சென்றபோது ஆயுதங்களுடன் காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் மனோவை கொல்லப் பாய்ந்தனர்

 

அங்கிருந்து மனோ தப்பியோட முயன்ற நிலையில் சுற்றி வளைத்த கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். மக்கள் நடமாட்டம் உள்ள காரைக்குடி சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K