வெள்ளி, 21 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 மார்ச் 2025 (12:49 IST)

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

Kadabomb Ogami

உலகிலேயே மிக அதிக விலை உடைய நாய் ஒன்றை பெங்களூரை சேர்ந்த நபர் ரூ.50 கோடிக்கு வாங்கியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

உலகம் முழுவதும் பல்வேறு வகையான நாய் இனங்கள் உள்ளன. அதில் பல நாய் வகைகள் செல்வந்தர்கள் வளர்ப்பதற்கு ஏற்றவாறு Breeding முறையில் உருவாக்கப்படுகின்றன. சில வகைகள் வேட்டையாடுதல் போன்றவற்றிற்காக, வீட்டுக் காவலுக்காக பயன்படுத்தப்படுகின்றன. அப்படியாக உலகம் முழுவதும்  உள்ள நாயினங்களில் மிகவும் விலை அதிகமாக விற்கப்படும் நாயினம்தான் WolfDog எனப்படும் நாய் வகை.

 

உலகத்தின் மிகவும் காஸ்ட்லியான இந்த நாயினமானது ஓநாய் மற்றும் கக்காசியன் ஷெப்பர்ட் இனங்களின் கலப்பில் உருவானதாகும். இதை பெங்களூரை சேர்ந்த சதீஷ் என்ற நபர் 5.7 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் 50 கோடி) வாங்கியுள்ளார்,

 

சதீஷ் இந்திய நாய்கள் ப்ரீடர்ஸ் அசோசியேஷனின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். தனக்கு நாய்கள் மீது உள்ள பாசத்தை வெளிக்காட்டும்படியாக இந்த நாயை வாங்கியுள்ளதாக கூறியுள்ள அவர், இந்த நாய்க்கு கடபாம் ஒகாமி என பெயர் வைத்துள்ளார். 

 

அமெரிக்கன் கென்னல் கிளப்பின் அறிக்கையின்படி, இந்த நாயின் இனம், அதன் பாதுகாப்பு உள்ளுணர்வு மற்றும் புத்திசாலித்தனத்திற்கு மிகவும் பிரபலமானது, மேலும் இது எட்டு மாத வயதுடையது மற்றும் 5 கிலோவுக்கு மேல் எடை கொண்டது!

 

Edit by Prasanth.K