வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (10:33 IST)

நேரலையில் 8 மில்லியன், இப்போது வரை 70 மில்லியன்.. இஸ்ரோ யூடியூப் சாதனை..!

பொதுவாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அல்லது ஐபிஎல் போன்ற கிரிக்கெட் போட்டிகளை தான் நேரலையில் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் பார்ப்பார்கள். ஆனால் நேற்று இஸ்ரோவின் யூடியூப் தளத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை நேரலையில் எட்டு மில்லியன் பேர் பார்த்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதுமட்டுமின்றி இப்போது வரை இந்த வீடியோவை யூடியூபில் 70 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விஞ்ஞானிகளின் சாதனைகளை நேரடியாக பார்க்க வேண்டும் என்று பலர் இந்த யூடியூப் சேனலில் விக்ரம் லேண்டர் தரை இறங்கியதை பார்த்தனர் என்பதும் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதும்  மகிழ்ச்சியுடன் இந்தியர்கள் கொண்டாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியர்களின்  சந்திராயன் 3 நிலவில் தரங்க இறங்கியதை யூட்யூபில் நேரலையில் பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை என்பது வரலாற்றுச் சாதனையாக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran