திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (08:16 IST)

சந்திரயான் 3 வெற்றி: இஸ்ரோவை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்தராயன் 3 நேற்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது என்பதும் இந்த வெற்றியை இந்தியாவே கொண்டாடி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
பிரதமர் மோடி, முதலமைச்சர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல அரசியல்வாதிகள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க, சீனா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா இந்த மாபெரும் சாதனையை செய்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது 
 
முதல்முறையாக நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 3 தரையிறங்கியதன் மூலம் நமது தேசம்  தனது பெருமைக்குரிய அடையாளத்தை முத்திரை குத்தி உள்ளது. நீங்கள் எங்களை பெருமைப்படுத்த உள்ளீர்கள். இஸ்ரோவிற்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva