வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 3 ஜனவரி 2020 (16:36 IST)

அமெரிக்க படையின் தாக்குதலில்... ஈரான் புரட்சி படை தளபதி பலி !

ஈரான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க தூதரகம் மீது  தாக்குதல் நடத்தினர். இதனால், ஈரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தினைச் சுற்றி அமெரிக்க தனது ராணுவத்தை நிறுத்தியது.
அப்போது, புரட்சிப் படைக்கும், அமெரிக்க படைகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில், ஈரானின் புரட்சிப் படைத் தளபதி காசீம் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தகவலை அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன் அறிவித்துள்ளது.
 
மேலும், வெளிநாட்டில் உள்ள அமெரிக்க தூதகரகத்தின் மீது  தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த சோலிமானி என்பவனும் இந்தத் தாக்குதலுல் கொல்லப்பட்டார். இந்த தகவலை   ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
 
ஆனால், அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை முட்டாள்தமானது என  ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் கூறியுள்ளார்.
 
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடைபெற்று வரும் இந்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.