1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (09:18 IST)

ஈராக் தலைநகர் பாக்தாக் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற அமெரிக்கா: போர் மூளுமா?

ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தில் இன்று காலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின்படி தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈராக் ராணுவத்தின் தளபதி உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளதால் ஈராக்கில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
 
சமீபத்தில் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஈரான் கைப்பற்றியதால் அமெரிக்க தூதரகம் அருகே பெரிய அளவில் அமெரிக்க ராணுவ படைகள் குவிக்கப்பட்ட நிலையில் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் ஆரம்பிக்கலாம் என கருதப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவுப்படி டிரோன் விமானங்கள் மூலம் அமெரிக்க படைகள் தொடர்ந்து ஈரான் தலைவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் ஈராக்கில் உள்ள பாக்தாத் விமான நிலையத்திற்கு அருகே சென்ற இரண்டு வாகனங்களை அமெரிக்காவின் ட்ரோன் தாக்கியதாகவும், இதில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி பலியானதாகவும் கூறப்படுகிறது. இவர்தான் ஈரானில் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவ தலைவர் என்பது குறிப்பிடத்தத்க்கது. மேலும் ஈரான் மிலிட்டரி கமாண்டர் அபு மஹ்தி அல் முஹாண்டிஸும் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுவதால் அங்கு பதட்டம் அதிகரித்துள்ளது