வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 பிப்ரவரி 2021 (11:23 IST)

டெக்ஸாஸை முடக்கிய பனிப்புயல்; பேரிடர் மாகாணமாக அறிவித்த ஜோ பிடன்!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத பனிப்புயல் வீசி வருவதால் அதை பேரிடர் மாகாணமாக அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தென்மேற்கு மாகாணமாக டெக்ஸாஸில் பனிப்பொழிவு வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்புயல் வீசியதால் வீடுகள், வாகனங்கள் பனியால் மூடியுள்ளன. இதனால் மின்சார சப்ளை முடங்கிய நிலையில் சுமார் 30 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

தண்ணீர் உறைந்து போயிருப்பதால் குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்சார நிறுத்தத்தால் ஹீட்டர்கள் வேலை செய்யாத நிலையில் மக்கள் பலர் குளிரில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள டெக்ஸாஸ் மாகாணத்தை பேரிடர் மாகாணமாக அறிவித்த அதிபர் ஜோ பிடன் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும், காப்பீடு பெற்று தரவும், காப்பீடு இல்லாதவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.