வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 18 பிப்ரவரி 2021 (18:50 IST)

’ஐஸ்வர்யா முருகன்’ படத்தின் ஆடியோவை வெளியிடும் பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்க இருக்கும் அடுத்த படத்தில் ராம் பொத்தானி நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் என்று செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி,  ’ஐஸ்வர்யா முருகன்’ என்ற படத்தின் ஆடியோவை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு இயக்குனர் லிங்குசாமி ’ஐஸ்வர்யா முருகன்’ என்ற படத்தின் ஆடியோவை வெளியிட உள்ளார்
 
பன்னீர்செல்வம் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் அருண் பன்னீர்செல்வம், வித்யா பிள்ளை, தெய்வேந்திரன், லால்வானி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா என்பவர் இசையமைத்துள்ளார்