புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (09:38 IST)

தடுப்பூசிக்காக பாட்டி வேஷம் போட்ட ப்யூட்டிகள்! – அமெரிக்காவில் நூதன சம்பவம்!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வயதானவர்கள் போல இளம்பெண்கள் வேஷமிட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா முழுவதும் கொரொனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக வயதானவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஃப்ளோரிடாவில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வந்த இரண்டு வயதான மூதாட்டிகள் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களை தனியாக அழைத்து விசாரித்த அதிகாரிகள் பிறப்பு சான்றிதழை வாங்கி சோதித்தபோது அது போலியானது என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரித்ததில் அவர்கள் மூதாட்டிகளே இல்லை, இளம்பெண்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. முதியவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படுவதால் தடுப்பூசியை பெற இவ்வாறு செய்ததாக அந்த பெண்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.