1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (18:56 IST)

அமெரிக்கவுடனான உறவை முறிக்க பாகிஸ்தான் முடிவு!!

அமெரிக்காவுடனான உறவை தற்காலிகமாக முறிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.


 
 
சமீபத்தில், தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். மேலும், பாகிஸ்தானில் புகுந்து வான்வழி தாக்குதல்களை நடத்துவோம் எனவும் அமெரிக்க உள்துறை மந்திரி பேட்டியளித்திருந்தார். 
 
இதனால், ஆத்திரமடைந்த பாகிஸ்தான், அமெரிக்காவிடமிருந்து நிதியையோ, ஆயுதங்களையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை, எங்களை மரியாதையுடன் நடத்துங்கள் என கூறியது.
 
இந்நிலையில், தற்போது பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்த அரசு முடிவெடுத்துள்ளதாகவும், இரு நாட்டு தலைவர்கள் பயணமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.