வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 1 மே 2019 (19:08 IST)

மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி! ஐநா அறிவிப்பு

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வந்த நிலையில் இதற்கு சீனா இதுவரை முட்டுக்கட்டை போட்டு வந்தது. இந்த நிலையில் சற்றுமுன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக  ஐ.நா சபை அறிவித்தது
 
மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பது குறித்து, ஐ.நா.,வில் இன்று விவாதம் நடந்தது. இன்றைய விவாதத்தின்போது இதுவரை ஆட்சேபம் தெரிவித்து வந்த சீனா இன்று ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை. சீனா தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியதை அடுத்து, மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா., அதிகாரபூர்வமாக அறிவித்தது. இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த தீர்மானம் நிறைவேற ஆதரவு அளித்த அனைத்து நாடுகளுக்கும் இந்தியா தனது நன்றியை தெரிவித்துள்ளது.
 
மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புக்கு, உலக அளவில் இனி பொருளாதார, நிதி உதவிகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.