’8 வயது ’ சிறுவன் செய்த கொலை : திடுக்கிடும் பழிவாங்கும் சம்பவம்

murder
Last Modified செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (19:05 IST)
நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள பதேபூர் சிக்ரி என்ற இடத்தில் 8 வயதுள்ள சிறுவன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் அவனது பழிவாங்கல் உணர்ச்சி என்றால் நம்மால் நம்ம முடியுமா ? ஆனால் அதுதான் நிஜம்.
டெல்லியில்  பதேபூர் சிக்ரி என்ற இடத்தில் சமீபத்தில்  ஒரு சிறுமி மேற்கூறிய 8 வயது சிறுவனின் தம்பியை கீழே விழச் செய்துவிட்டாள்.இதில் அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  அதன் பிறகு இருவீட்டாருக்கும் கடும் வாக்குவாதம் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.
 
இந்த சம்பவம் 8 வயது சிறுவனின் மனதில் பழிவாங்கும் உணர்வைத் தூண்டியுள்ளது. இதை மனதில் வைத்துக்கொண்ட அந்த சிறுவன் தன் தம்பியை தள்ளிவிட்ட பெண்னின் ஒன்றரை வயது தம்பியைக் கொன்று தூரத்தில் இருந்த சாக்கடையில் போட்டுவிட்டான். 
 
ஒன்றரை வயது குழந்தையைக் கொன்று சாக்கடையில் வீசிய போது கவலைப்படாத அந்த 8 வயது சிறுவன்  இன்மேல் பிரச்சனை வரும் என்று தெரிந்து வீட்டைவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

 
பின்னர் இருவீட்டார் பிள்ளைகளும் காணாமல் போனதை அடுத்து போலிஸார் பலத்த விசாரணை நடத்தினர்.அப்போது சாக்கடையில் வீசிய குழந்தையும் கிடைத்தது. அதன்பின்னர் தப்பிஓடிய சிறுவனையு பிடித்த போலிஸார் அவனிடம் விசாரணை நடத்தியபோது தான் பழிவாங்கவே பிஞ்சுக்குழந்தையைக் கொன்றதாகக் கூறியுள்ளான்.

இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, தற்போது சிறுவனை மனநல சிகிச்சை மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 


இதில் மேலும் படிக்கவும் :