நேற்றைய மோசமான சரிவுக்கு பின் இன்று உயர்ந்தது பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!
நேற்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1300 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்த நிலையில், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், இன்று பங்குச் சந்தை ஆரம்பத்திலேயே ஏற்றத்தில் வர்த்தகம் ஆகி வருவது முதலீட்டாளர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 336 புள்ளிகள் உயர்ந்து 76,341 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 62 புள்ளிகள் உயர்ந்து 23,228 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் பாரதி ஏர்டெல், டெக் மகேந்திரா, எச்டிஎப்சி வங்கி, அப்பலோ ஹாஸ்பிடல், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஜோமாட்டோ, ஆக்சிஸ் வங்கி, ஐடிசி, பஜாஜ் பைனான்ஸ், கோடக் மகேந்திரா வங்கி, ஹீரோ மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
அதே நேரத்தில், இண்டஸ் என்ட் வங்கி, டாடா ஸ்டீல், விப்ரோ, டிசிஎஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், சிப்லா, ஏஷியன் பெயிண்ட், எச்சிஎல் டெக்னாலஜி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva