செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (16:08 IST)

கொத்து கொத்தாக புதைக்கப்படும் உடல்கள்: பதைபதைக்கும் காட்சி!

ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீதான தாக்குதலில் ராணுவ வீரர்கள், அப்பாவி பொதுமக்கள் என பலரும் பலியாகி வருகின்றனர். 

 
உக்ரைன் மீது உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா போர் தொடுத்துள்ளது. 16 நாட்களாக ரஷ்ய ராணுவம் உக்ரைன் நகரங்கள் மீது பலமுனை தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் நகரங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். ரஷ்ய தாக்குதலால் உக்ரைன் நகரங்களில் இருந்து 25 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர். 
ஆனால், இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள், அப்பாவி பொதுமக்கள் என பலரும் பலியாகி வருகின்றனர். இவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் கொத்து கொத்தாக புதைக்கப்படும் காட்சிகள் வெளியாகி அனைவரையும் வேதனையடைய செய்திருக்கிறது. ஆம், மரியுபோல் நகரில் உயிரிழந்தவர்களின் உடலை வாகனங்களில் கொண்டு வந்து ஒரே இடத்தில் புதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.