செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (11:15 IST)

64 கி.மீ நீளத்திற்கு அணிவகுக்கும் ரஷ்ய படைகள்! – உக்ரைன் தலைநகரை நெருங்கியது!

உக்ரைனில் ரஷ்யா தற்காலிகமாக போரை நிறுத்தியிருந்த நிலையில் உக்ரைன் தலைநகரை நோக்கி பிரம்மாண்ட ரஷ்ய ராணுவம் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் ரஷ்யாவை கண்டிக்கும் விதமாக உலக நாடுகள், பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்த மூன்று கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் தற்போது உக்ரைனின் தலைநகர் கீவ் நகரை நோக்கி ரஷ்யாவின் பிரம்மாண்டமான ராணுவம் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாக்ஸர் டெக்னாலஜி நிறுவனம் எடுத்த செயற்கைக்கோள் படங்களில் கீவ் அருகே 64 கி.மீ நீளத்திற்கு ரஷ்ய ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.