1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Facebook make space for hate speech about Russia

ரஷ்யா மீது வன்மத்தை கொட்டலாம்..!? – விதிகளை தளர்த்திய பேஸ்புக்!

Facebook
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் ரஷ்யா மீதான வெறுப்புணர்வு பேச்சுகளை பேஸ்புக் அனுமதிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு ரஷ்யா மீது மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ரஷ்யா மீது உலக நாடுகள் பல பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

பொதுவாக ஒரு நாட்டுக்கு எதிரான வெறுப்புணர்வு பேச்சு மற்றும் பதிவுகளை பேஸ்புக் நிறுவனம் தணிக்கை செய்துவிடும். ஆனால் ரஷ்யா மீது மக்கள் பலரும் தங்கள் விமர்சனங்களை வைத்து வரும் நிலையில் ரஷ்யா மீதான வெறுப்பு கருத்துகளை அனுமதிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் விதிகளை தளர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
நெட்பிளிக்ஸ்ல என்ன படம் பாக்கலாம்… கட்சி மரண அடி வாங்கும்போது காங்கிரஸ் பிரமுகர் டிவீட்!